×

மார்த்தாண்டம் அருகே விபத்து வாலிபர் மீது பைக் மோதல்

மார்த்தாண்டம், ஆக.7: புதுக்கடை பூயன்விளை பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷன் (36). புதுக்கடையில் இருந்து பேருந்தில் ஏறி வந்த அவர் சென்னி தோட்டம் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாகச் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகவும், அஜாக்கிரதை ஆகவும் சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர், பிரியதர்ஷனை இடித்து தள்ளி விட்டு வேகமாக சென்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மார்த்தாண்டம் அருகே விபத்து வாலிபர் மீது பைக் மோதல் appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Priyadarshan ,Pudukadai Bhuyanvilai ,Pudukadai ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர்...